உறவு! இராசமணி.

 

மதிய விருதுண்ண வரும் விருந்தினருக்கான முளைக்கீரையினை கடைந்தபடி வம்சாவினது அம்மா முன்வாசல் பக்கம் கார் வந்து நிற்கும் ஓசை கேட்கிறது எட்டிப்பார் என தனது மகள் வம்சாவினை பணித்தாள் மாமா மாமியுடன் வேதியனும் வந்துள்ளான் என மகிழ்ச்சியுடன்  தெரிவித்தாள் நல்லூர் கந்தசாமி கோயிலில் வருடம் தோறும் ஆடிமாத வளர்பிறை ஷஷ்டி திதியில் கொடியேற்றம் நடைபெற்று இருபத்தாறு நாட்கள் உற்சவம் நடைபெறும் இரத உற்சவத்தினை தரிசிக்க லண்டனிலிருந்து வம்சாவினது மாமா குடும்பம் வருகை தந்துள்ளார்கள் யாவரும் கூட்டத்தில் ஒன்று கூடி அளவளாவினர் வம்சா  இரத உற்சவத்திற்கு அணிய தயார் செய்த செம்பருத்தி பூ பட்டுநூலும் வெள்ளி நிற பட்டு ஜரிகையும் இணைத்து பின்னப்பட்ட ஆரணிபட்டு சேலை, தங்க அட்டிகை, கம்மல், வளையலை யாவருக்கும் காண்பித்து மகிழ்ந்தாள் வழமைபோல் அதிகாலை நான்கு மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பாராயணம் நடைபெற்று எம்பெருமான் திருவுருவத்திற்கு அபிஷேக ஆராதனை அடியார்களின் அங்கபிரதட்சணம், அடிப்பிரதட்சணம் நடைபெறுகின்றதா என வேதியன் வினாவ வம்சா மௌனமாக வேதியனை நோக்க இடையில் நுழைந்த வம்சாவினது அப்பா ஆம் என்றார் மறுநாள் அதிகாலை ஐந்து மணியளவில் இரு குடும்பமும் நடந்து கோயிலுக்குச் சென்றனர்; கோயிலின் உள்வீதியில் அடிப்பிரதட்சணமும் வெளிவீதியில் அங்கபிரதட்சணமும் நடைபெற்ற வண்ணம் இருந்தது. சரியாக ஆறுமணி பதினைந்து நிமிடத்திற்கு வசந்த மண்டபத்தில் வள்ளிதெய்வானை சமேதராய் வீற்றிருந்த ஆறுமுகசாமி திருவுருவத்தினை ஆறு அடுக்கு தீபங்களாலும் ஆறு பஞ்சமுக தீபங்களாலும் ஆராதனை செய்தனர் தெற்கு வாசல்வரை அமர்ந்திருந்த முருகபக்தர்கள் இருகரம் கூப்பி வணங்கி அரோகரா என கோசமிட்ட தமது வேண்டுதலை நிறைவேற்றினர்.

ஏழுமணிக்கு எம்பெருமான்; நல்லூரான் வள்ளி தெய்வானை இணைந்த ஆறுமுகசாமி திருவுருவம் சூரிய வெண்கதிர்கள் பட்டு ஒளிர வெளிவீதியில் தோன்றும்  காட்சி முருகவழிபாட்டு பக்தர்களை மனம் குளிரவைக்கும் மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பக்தர்கள் இருகரம் கூப்பி  வணங்க நல்லூரான் ரதத்தில் ஏறுவார். தொண்டர்கள் தேங்காய்களை நேர்மாறாக எறிந்து உடைத்து மகிழ்வர் தேர்வடம் பரிமாற தேரசையும் சக்தி தொலைக் காட்சி நிறுவனம் நல்லூர் கந்தன் ரத உற்சவத்தினை நேரலை செய்தது அரைச்ச சந்தன நிறமும் பழமையான உயர்தர சேகரிப்பு வேலைப்பாடுமுள்ள பனாரசி பட்டு உடுத்திய பெண் தனது உருவம் சக்தி தொலைக்காட்சியில் வந்ததாக அம்மா தந்தியற்ற கையடக்க தொலைபேசியில் அழைத்துச் சொல்ல அகம் மகிழ்ந்தாள் எம்பெருமான் திருவுருவம் தேரில் அசைய பக்தர்கள் தேரடி தொடர்ந்தனர். தேர் உற்சவத்தில் சமத்துவம் தமிழர் பண்பாடு இரண்டையும் பக்திநிலை கோரவையாக்கியுள்ளது என ஒரு பேராசிரியர் தனது நண்பனிடம் கூறினார். ஆறுமுகநாவலர் நினைவக்த்தின் முன் மரநிழலில் கூடிநின்ற குடும்பத்தில். சித்தி முறையானவள் தனது மூத்த சகோதரிகள் குடும்பத்திடம் தேர்பீடத்திற்கு வந்தபிறகு எனது வீட்டிற்கு சைவவிருந்துண்ண வருமாறு அழைத்தாள் உற்சவ காலமான ரத உற்சவ தினத்தில் வலிகாம பகுதியிலிருந்து எம்பெருமான் வேலனை வழிபட வருவோர் கோயிலின் உள்வீதி சென்று கர்ப்பகிரகத்தில் வீற்றிருக்கும் வேலனை வழிபட்டு ஒரு ரூபா ரசீது பெற்று அர்ச்சனை செய்து ஆராதனை செய்யும் பஞ்சமுக தீபம்தனை வழிபாடு செய்து தமது வேண்டுதலை நிறைவேற்றுவர். எம்பெருமான் ரதம் அசைந்து அசைந்து பீடத்திற்கு வந்த பிறகு பச்சை இலைகளால் சாத்துப்படி செய்து மீண்டும் வசந்த மண்டபம் நோக்கி நகர்வார் பக்தரில் ஒரு சிறுவன் சாத்துப்படி என்பதன் பொருள் யாது என வினாவினான் மகனின் ஆர்வத்தை மனதிற்குள் பாராட்டியபடி எம்பெருமானிற்கு மரியாதை செலுத்தும் நடவடிக்கை ஆகும் என தந்தை கூறினார்.

தண்டாயுதபாணி அபிஷேக ஆராதனை தரிசித்த பிறகு வம்சா வேதியன் குடும்பம் வீடு திரும்பினர். தனது அறைக்கு சென்ற வேதியன் அரைச்ச சந்தண நிற நாலுமுள வேட்டியும் சால்வையும் தங்க காப்பும் சங்கிலியும் அணிந்த காளை தனது அழகினை நிலக் கண்ணாடியில் ரசித்த படி வம்சாவும் ரசித்திருப்பாள் என எண்ணி அகம் மகிழ்ந்தான் வம்சாவினது மதிய விருதுண்ண அழைக்கும் குரல் கேட்டது சகலரும் தரையில் அமர்ந்து வாழையிலையில் பசிதீர விருதுண்டனர் வேதியன் சுவைத்து மகிழ்ந்து உணவு உட்கொள்ளுதலினை அனைவரும் ரசித்தனர் வேதியனும் வம்சாவும் திண்ணையில் அமர்ந்தனர் கூட வம்சாவினது அம்மாவும் அமர மூவரும் பல கதைகள் அளவளாவினர். காலையில் நல்லூர் கந்தசாமி கோயிலில் சமஸ்கிருத மொழியில் கூறிய கட்டியத்தின் விளக்கம் யாதென வேதியன் வினாவினான் நல்லூர் கந்தசாமி கோயிலின் வரலாறு கூறப்படுகிறது என வம்சாவினது தாய் கூறினார் விளக்கம் தாருங்கள் மாமி என உரிமையுடன் தொடர்ந்தான் மூன்று பரம்பரை தொடர்பு உள்ளது என்றாள்.
வேதியன் அப்படியா மாமி என்றான் 17ம் நூற்றாண்டளவில் நல்லூர் பகுதியை ஆட்சி செய்த செண்பக பெருமாள் எனும் இலங்கைத் தமிழ் மன்னரால் கோயிலின் கட்டுமாண பணி ஆரம்பிக்கப்பட்டு இரண்டாம் நிலையில் கிருஷ்ண ஐயர் என்பவரால் தொடரப்பட்டு 18ம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் இரகுநாத மாப்பாண முதலியார் குடும்பத்தார் பராமரித்து வருகிறார்கள் என வம்சாவினது தாய் கூறினார்.

மாலை ஆறுமணிக்கு நல்லூரான் தேவிகள் சகிதம் வெளிவீதி உலா நாதஸ்வரம், தவில் வாத்தியங்கள் ஒலிக்க வேதபாராயணம் ஓத கற்பூர ஒளி ஒளிர ஆரம்பமாகியது சாமந்திபூ நிற காஞ்சிபுர பட்டு தாமரைபூ நிற பனாரிசு பட்டு மருக்கொழுந்து பூ நிற ஆரணிப் பட்டு அணிந்த பெண் சினேகிதிகள் ஆனால் மங்கை பருவத்தினர் எம்பெருமான் வெளிவீதி உலாவில் நாதஸ்வரம் தவிலில் இருந்து எழுந்த மல்லாரி இசையை ரசித்தபடி நடந்தனர். மேற்கு வீதியில் உள்ள கடைதெரு பகுதியில் காளைப் பருவ ஆண்கள் மாம்பழ சுவையுள்ள ஐஸ்கிரீம் அருந்தி மகிழ்ந்தனர். பாலன்கள், மடந்தைகள் வண்ண வண்ண பலூன்களை எறிந்து பிடித்து விளையாடினர்.

அறிதல்

காங்கேயன் காளை இரண்டு பூட்டிய கட்டை வண்டில் நடுவில் பச்சைப் புல்களும் இருகரையும் மண்ணும் படிந்த ஒற்றையடி பாதை வழியாக வயற்காடு நோக்கி பயணித்தது மகிழன் வண்டிச் சவாரியில் வலலவன் ஆவான் சவாரியுடன் தன்னுடன் பயணித்த சக தொழிலாளியுடன் பேசவும் ஆரம்பித்தான் தோடுடைய செவியன் எனும் தேவராத்தில் நான்கு சமமான அளவுள்ள சொல் அசைகள் வருகிறது என பேச்சை ஆரம்பிக்க ஆமாம் காடுடைய, ஏடுடைய என நண்பன் தொடர பீடுடைய என மகிழன் கூறி முடித்தான். விடையேறி அதாவது எருதிலேறி  ஞானசம்பந்தரை தரிசிக்க சிவபெருமான் அன்று வந்துள்ளார் என நண்பன் கூறினான். ஞானசம்பந்தரும் துவெண்மதி சூடி என சிவபெருமானின் தோற்றத்தை அலங்கரித்து கூறியுள்ளார் என்றான் வண்டியின் இரு எருதுகளின் சலங்கைகளின் மணியோசை கேட்க வண்டி பயணம் தொடர்கிறது.

நகர்புற பாடசாலையில் ஆரம்பபள்ளி மாணவர்களிற்கு இரண்டாம் பாடவேளை ஆரம்பமாகிறது. மாணவர்களின் மனதில் தமிழிசையில் குறில்  நெடில் ஒலிஅளவை பயின்று பாடுதல் வேண்டும் என பாடசாலையின் தமிழ்தின விழாவில் பிரதம விருந்தினர் பேசியது நினைவில் நின்றது. பாட ஆயத்தம் மாணவர்களிடமும் காணப்பட்டது. ஆரம்பப்பிரிவு ஆசிரியர் இன்று பாரதியார் பாடல்களை பாடி பயில உள்ளோம் எனக் கூறினார். ஓடி (ஈ) விளையாடு (ஊ) பாப்பா (ஆ) என நெடில் ஒலிகளை அசைத்து பாடி பயில உதவினார் அடுத்து திருவாசகத்தில் சிவபுராண கலிவெண்பாவில் இசைவெண்பாவினை பாடி பயிற்றுவித்தார். வேகம் கெடுத்தாண்ட (அ) வேந்த னடிவெல்க (அ) அடுத்து உயிர்குறிகள் பற்றி ஆசிரியர் கற்பிக்க ஆரம்பித்தார் ஒருபொருள் பல சொற்கள் ஞாயிறு, பகலவன், ஆதவன் எனின் ஞாயிறு எனும் சொல்லை எழுதப் பேச உயிர்குறிகள் உதவுகிறது. அதாவது ஞா எனும் உயிர்மெய் எழுத்தினை எழுதும் போது ஞ எனும் குறில் ஒலி, உயிர்மெய் எழுத்துடன் அரவு (h)எனும் உயிர்குறியை இணைத்தால் தான் ஞா எனும் நெடில் ஒலி உயிர்மெய் எழுத்தினை எழுத பேச முடிகிறது எனக் கற்பித்தார்.

மரபு சார்ந்த குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோயில் மண்டபத்தில் வாராந்த நிகழ்ச்சி நிரலில் ஞானபழம் என்றும் நாட்டியம் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெறவுள்ளதாக எழுதப்பட்டியிருந்தது நிகழ்ச்சி ஆரம்பமானது அடவுகள் நுட்பமான தாள அளவுகள் அழகிய முத்திரைகளுடன் நிருத்தம் முதலில் நிகழ்ந்தது அடுத்து நாட்டியம் ஆரம்பமானது சிவன் பார்வதி பிள்ளையார் முருகன் நாரதர் பிரம்மன் கதாபாத்திரங்களாக பங்கேற்றனர்.

பிரம்மனின் படைத்தல் செயற்பாட்டில் பிள்ளையாரிடம் தோன்றிய ஞானநிலையான பக்தி எனும் அறிதலை வெளிப்படுத்தி மாங்கனியை பரிசாக வழங்க வேண்டும். நாரதரை மாங்கனியுடன் சிவன் பார்வதியிடம் அனுப்ப பிள்ளையார் பதின்னான்கு உலகையும் ஆள்பவர்கள் தனது தாய், தன்தைதான் என்பதை ஏற்று தாய் தந்தையை மிக விரைவாக வலம் வந்து தனது தாய் தந்தை மீது வைத்த பக்திநிலையினை வெளிப்படுத்தி மாங்கனியினை பரிசாகப் பெற்றார் முருகனின் கோபம் பிள்ளையாரின் மகிழ்ச்சி  நிருத்தியம் மூலம் அபிநயமாக கண்டு அவையோர் மகிழ்ந்தனர்.

 

வேதா அரச தேசிய பாடசாலையினது தமிழ்மொழி ஆசிரியராவார். அப்பாடசாலையில் ஆங்கிலமொழி மூலம் மாணவர்கள் ஆசிரியர்கள் கேட்டுணர்ந்து பேசுபழகும் வசதியுள்ளது வேதாவினது மகள் வள்ளி அதே பாடசாலையில் இடைநிலை பள்ளியில் கற்கிறாள் அன்று காலை காலைக் கடன்கள் நிறை வுற பசுவும் எருதும் கலந்து ஈன்ற நாட்டுப்பாலில் காபி அருந்திபடி தனது தாயிடம் திருக்குறள் எழுதிய புலவர் பெயர்யாது என வினாவினாள் வள்ளுவம் என தாய் பதிலளித்தாள் அன்று பாடசாலையில் இல்லங்களுக்கு இடையில் புதிர் போட்டி நடைபெற்றது வள்ளியும் புதிர் போட்டியில் பங்குபற்றினாள் வள்ளி எதிர்கொண்ட வினாவானது திருக்குறள் எழுதிய புலவர் பெயர் யாது எனும் வினாவாகும் வள்ளி உடனே வள்ளுவம் என்கிறாள் விடை தவறானது எனப் பதிவாகியது. வள்ளி கடும் துயருற்றாள்.

புரட்டாதி மாதம் வளர்பிறை சப்தமியன்று சரஸ்வதி பூசை பெருவிழாவாக பாடசாலையில் நடைபெறுகின்றது.

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க எனும் சொற்றொடர் பற்றி பெரும் பேச்சாளர் பேசினார். அச் சொற்றொடரை இயற்றியவர் பெயரினை  பேச்சாளர் குறிப்பிடவில்லை. வள்ளி அச்சொற்தொடரை பேச்சாளர்தான் இயற்றி பேசினார் எனக் கருதினாள். பரீட்சையில் கட்டுரை வினாவிற்கு பதிலளிக்கும் போது அச்சொற்தொடரை எழுதியவள் இயற்றியது பேச்சாளர் தான் எனக்கருதி பேச்சாளரின் பெயரைக் குறிப்பிட்டாள். இதனை வள்ளியின் ஆசிரியர் மூலம் அறிந்த வேதாவும் துயருற்றாள்.

ஆக்கம் – இராசமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *