முல்லை வைத்தியசாலையில் இரத்தத்திற்கு பற்றாக்குறை; இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்!

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (10) இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நோயாளிகளின் நலனையும் கருத்தில் கொண்டும் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலையின் முக்கியமான சூழ்நிலையில் இந்த நிகழ்வை அவர்கள் நடத்தியிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் சசினி விஜயரத்ன , வைத்தியர் எஸ்.டீ.சமரசிங்கவின் பரிசோதனையின் கீழ் , 100 இரத்த தானம் செய்பவர்களின் பங்கேற்புடன் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு 59வது காலாட்படை பிரிவின் வழிகாட்டுதலின் இராணுவ முகாம்களுக்கு கீழுள்ள குறித்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் 59வது காலாட் படை தலைமை செயலகம், 591வது படையணி தலைமை செயலகம், 12வது இலங்கை இராணுவ காலாட் படை, 10வது சிங்ஹ படையணி, 5வது சிங்க படையணி, 14வது கெமுனு ஹேவா படையணி, 593வது படையணி தலைமை செயலகம், 6வது கெமுனு ஹேவா படையணி , 6வது தேசிய பாதுகாப்பு படையணி போன்ற படையணியை சேர்ந்த இராணுவத்தினர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்த தானத்தை வழங்கியிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *