யாழ் புத்துார் பாலத்தில் பிக்கப் வாகனத்துக்கு குறுக்கே பாய்ந்த மோட்டார் சைக்கிள் – 7 பேர் படுகாயம்

யாழ்.புத்தூர் – வண்ணாத்திப் பாலத்தடியில் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புத்தூர் வீதி ஊடாக பயணித்த பிக்கப் வாகனம் குறுக்காக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினைக் காப்பாற்ற முற்பட்ட வேளையில் இவ் விபத்து சம்பவித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மற்றும் பிக்கப் வாகனத்தில் பயணித்தவர்கள் என ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply