கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் குறித்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பிறகு குறித்த பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றத்திற்கு வெளியே அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் மக்கள் பலர் அவருக்கு மாலை அணிவித்ததுடன் அவரை வீதியில் தூக்கிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.