நவீன விவசாய நடவடிக்கைகளை ஊக்குவித்து விவசாயிகள் உச்ச பயனை அடையும் செயற்பாடுகளில் ஒன்றான இயந்திர நாற்று நடுகை கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தினால் இன்றைய தினம் யூனியன் குளம் பகுதியில் நடுகை முன்னெடுக்கப்பட்டது .
குறித்த பகுதிக்கு பொறுப்பான விவசாய போதனாசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி கலந்து கொண்டார்.குறித்த நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குறித்த பகுதியில் 40ஏக்கர் வரை இயந்திர நாற்று நடுகை மூலம் செய்கை மேற்கொள்வதற்கு விவசாயிகள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.