யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரரான யூட் பேரின் (வயது – 27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
யாழ். செம்மணிப்பகுதியில் மோட்டார் சைக்கிள், பேருந்து, முச்சக்கரவண்டி உள்ளிட்ட மூன்று வாகனங்களும் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இளைஞரின் உயிரிழப்பு குடும்பத்தை மட்டுமன்றி அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.