வெளிநாட்டில் பணிபுரிந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில் இதுவரையில் தனது மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மஸ்கெலியா – சாமிமலை ஓல்ட்டன் தோட்ட நிலாவத்தை பிரிவைச் சேரந்த மோகன் நிஷாந்தனி (வயது – 33) என்ற இரண்டு குழந்தைகளின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் இலங்கைக்கு கடந்த மாதம் (10/09/2025) திரும்பி வந்த போதும் இன்று வரை தனது வீட்டிற்கு வரவில்லை என அவரது கணவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவரது முறைப்பாட்டில் கடந்த ஒரு மாதமாக தனது மனைவியை காணவில்லை என நாட்டின் பல பாகங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை எனவும் கணவர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டுக்கமைய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரைக் கண்டால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு 0522277222 என்ற இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0753591052/0753435012 என்ற இலக்கங்களுக்கோ தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.