மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருந்து கடந்த திங்கட்கிழமை (13) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சடலமானது கெக்கிராவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் நாவுல பொலிஸ் நிலையத்தின் 066-2246222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு, பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.




