
ஹஜ் சட்டமூலத்தை வரைய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். ஹஜ் சட்டமூலம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.




