
அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தின் போது, முஸ்லிம் சமூகத்தின் சார்பில் இருவருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன்படி, தேசிய ஒருமைப்பாட்டுப் பிரதி அமைச்சராகக் கடமையாற்றி வந்த முனீர் முழப்பர், சமய விவகார மற்றும் கலாசாரப் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டுவந்த பொறியியலாளர் அர்கம் இல்யாஸ், மின் வலு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.




