
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் நேற்றைய தினம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக சந்தேக நபர்கள் காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று மாலை அழைத்து வரப்பட்டுள்ளனர்.




