
பேரிடர்களின்போது- உயிராபத்தை எதிர்நோக்கிய மக்களை தமது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய அல்லது அதற்காக முனைந்த வீர மானிடர்களை விருது வழங்கி கெளரவிக்கும் தேசிய விழா கடந்த சனிக்கிழமை பாராளுமன்ற சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள காணிச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.




