தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலங்கை பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி விழா, நேற்று மாலை பம்பலப்பிட்டி கதிரேஷன் கோவிலின் புதிய விழா மண்டபத்தில் நடைபெற்றது.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேம சந்திர தலைமையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது இந்து மத விசேட மத சடங்குகள் இடம்பெற்றதுடன், பம்பலப்பிட்டி நிர்மலாஞ்சலி நடன குழுவின் பொலிஸ் கலாச்சாரப் பிரிவு மற்றும் நடனக் குழுக்கள் இந்து கலாச்சார நடனக் கூறுகளுடன் நிகழ்வை அலங்கரித்தன.
இந்த நிகழ்வில் , பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் மாலிகா சூரியப்பெரும, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி கருணாரத்ன, சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் மற்றும் ஓய்வுபெற்ற இந்து உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நாட்டின் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான இந்து பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.













