சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் யாழ்ப்பாணம்; 2026 இன் சிறந்த நகரமாக உலகளவில் அங்கீகாரம்!

சுற்றுலாப் பயணிகளை 

ஈர்க்கும் யாழ்ப்பாணம் 

2026  இன் சிறந்த இடமாக

உலகளவில்  அங்கீகாரம் 

 

2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக இலங்கையின் யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. 

உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. 

இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

லோன்லி பிளானட்டின் “சிறந்த பயணம் 2026” இன் இத்தாலிய மொழி பதிப்பு கடந்த 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த தனித்துவமான அங்கீகாரம் இலங்கையின் சர்வதேச ஈர்ப்பை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

அத்துடன், சுற்றுலாத் துறையில் சமூக அடிப்படையிலான சுற்றுலா அனுபவங்களை ஊக்குவிக்கவும் ஒரு சக்திவாய்ந்த சந்தைப்படுத்தல் கருவியாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *