மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராசாவின் 83வது பிறந்ததினமான இன்று அவரது இல்லத்தில் நினைவேந்தல் நடைபெற்றது.
மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற நினைவேந்தலில் மறைந்த மாவை சேனாதிராஜாவின் உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவை சேனாதிராஜாவின் குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





