மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ நேற்றைய தினம் ( 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாட்டை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலை வரவேற்றனர்.
இலங்கையை வந்தடைந்துள்ள ‘KM BENDAHARA’ என்ற கப்பல் 64.16 மீட்டர் நீளம் கொண்டதுடன், 50 பேரினை கொண்ட அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது.
‘KM BENDAHARA’ கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் குழுவினர் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல உள்ளதுடன் குறித்த கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட உள்ளது.





