அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (28) மேலும் சரிந்துள்ளது.
அதேநேரம், 2024 செப்டம்பர் மாதத்துக்குப் பின்னர் முதல் முறையாக அது 300 ரூபாவை தொட்டது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலையானது இன்று முறையே 300.48 ரூபாவாகவும், 308.00 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் (27) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 299.98 ரூபாவாகவும், 307.51 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் சரிந்துள்ளது.
டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி இறுதியாக 2024 செப்டம்பர் 23 அன்று 300ஐ தொட்டது.
அப்போது கொள்முதல் விலை 300.18 ரூபாவாக இருந்தது.
எனினும், 2024 டிசம்பரில் இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி 285.94 ரூபாவாகக் குறைந்தமையும் குறிப்பிடத்தக்கது.






