42வது நாளாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்

 

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர்ந்தும் 42 ஆவது நாட்களாக இன்றும் (28) போராட்டத்தை முன்னெடுத்தனர்.

திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை வெயில், மழை பாராது அபகரிக்கப்பட்ட தங்களது விவசாயங்களை மீளப் பெற்றுத் தரக்கோரி போராடி வருகின்றனர். 

சூரிய மின்சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு தங்களது விவசாய நிலங்களை வழங்கியதை அடுத்து தொடரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 

முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளனம், அகில இலங்கை விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் இணைந்து காணி மீட்புக்காக குரல் கொடுத்து வருகின்றனர். 

800 ஏக்கரளவில் விவசாய செய்கைக்கான காணியை அபகரித்துள்ளதால் போராட்டம் தொடர்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *