அண்மைக்காலமாக பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்யும் போது, நடந்து கொள்ளும் முறை குறித்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யும்போது ஊடகங்களை உடன் அழைத்துப் போய் கைது செய்வது தொடக்கம் விசாரணை செய்வது வரை ஊடகங்கள் முன்னிலையில் மேற்கொள்ளும் கலாசாரம் அதிகரித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவ்வாறான செயற்பாடுகள் மூலம் சமூகத்தின் ஒரு தரப்பை மகிழ்ச்சிப்படுத்த முடிந்தாலும், அதன் மூலம் விசாரணையாளர்களுக்கு எதுவித சாதகமும் கிட்டப் போவதில்லை என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே எந்தவொரு நபரையும் கைது செய்யும்போது பொலிஸார் தொழில்முறை தேர்ச்சியுடன் நடந்து கொள்வதுடன், நீதியான விசாரணைகளுக்கு வழி செய்யும் வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





