மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் குளிரான காலநிலையுடன், இன்று (30) காலை பொகவந்தலாவ பகுதியில் பூக்கள் மீது உறைபனி விழுந்துள்ளது.
இவ்வாறு பொகவந்தலாவ பகுதியில் உள்ள ஒரு புல்வெளியில் மலர்களின் இதழ்கள் மீது உறைபனி விழுந்த காட்சியை எமது செய்தியாளர் பதிவு செய்துள்ளார்.
அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தெரிவித்ததாவது, “இன்று காலை மிகவும் குளிராக இருந்தது; தாவரங்களின் மீது உறைபனி தென்பட்டது,” எனக் கூறியுள்ளார்.
மத்திய மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை குறைவடைந்து, கடும் குளிரான காலநிலை நிலவிவருகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் உறைபனி காணப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.
<a href="http://” target=”_blank”>





