எமது பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கியில் சுமார் 150 கோடி ரூபா உள்ளது. அங்கு சென்று கடன் வசதிகளை பெறுங்கள். அங்கு வட்டி வீதமும் குறைவு , வீணாக தனியார் நுண் கடன் நிறுவனங்களிடம் சிக்க வேண்டாம் என்று மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு பொதுநூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் , தேற்றாத்தீவு பொது நூலக வாசகர் வட்ட தலைவர் செ.பத்மநாதன் தலைமையில் பொது உலகம் வாசிப்போருக்கே சொந்தமானது எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு இன்றைய தினம் ( 30 ) தேற்றாத்தீவு கொம்புச்சந்தி ஆலய முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்விற்கு,பிரதி முகாமைத்துவ உத்தியோகத்தர் ஜெயலட்சுமி சுந்தரலிங்கம் ,சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் S குகநேசன், மற்றும்,கிராம பொது நிர்வாக அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறுவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சின்னஞ்சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன.வாசிப்பு மாதத்தை ஒட்டி நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





