மஸ்கெலியா பிரதேச வைத்திய சாலையில் கடந்த சில மாதங்களாக பாரதூக்கி இயங்கவில்லை இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் பாரிய இன்னலுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இவ் வைத்திய சாலையில் நான்கு அடுக்கு மாடிகளை கொண்டது சில மாதங்களுக்கு முன் கன மழை காரணமாக மின் மாற்றியில் இருந்து தரை வழியாக வரும் மின் கம்பிகள் எரிந்ததால் இந்த பாரதூக்கி இயங்காமல் போய் விட்டது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரிகளுக்கு அறிவித்தும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிருஷ்ணன் கலைச்செல்வி நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றும் பயண் இல்லை என்று இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் விசனம் தெரிவித்தனர்.
மேலும் இவ் வைத்திய சாலையில் உள்ள மேலும் ஒரு பாரதூக்கி கடந்த பல வருடங்களாக செயல் இழந்து உள்ளது.
அத்துடன் இவ் வைத்திய சாலையில் உள்ள மின் பிரபாக்கி கடந்த சில வருடங்களாக செயல் இழந்து உள்ளது இவற்றை சுகாதார அமைச்சர் மற்றும் நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வந்து இப் பகுதியில் உள்ள மக்கள் நலன் பேணும் வகையில் இந்த வைத்திய சாலையில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.





