ஆசிரியர் சேவை சங்கம் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 7ஆம் நாளாகவும் தொடர்கிறது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சேவை சங்கங்களின் தலைவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 24 ஆண்டுகளாக காணப்படும் அதிபர், ஆசியர்களுக்காக சம்பளப் பிரச்சினை குறித்து அனைத்து அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்திய போதிலும் தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே தங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் 14 சங்கங்கள் இணைந்து இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்பது குறப்பிடத்தக்கது.