நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா என்ஃபீல்ட் ரோஸ்கிலியா தோட்டப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி சுமார் 15 வருட காலத்திற்கு மேலாக புணரமிக்கப்படாமல்குன்றும் குழியுமாக காணப்படுவதால் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் பல்வேறு அசோகரியங்களை எதிர் நோக்குவதாக குற்றம் சுமத்துகின்றனர்.
என்ஃபீல்ட் பகுதியிலிருந்து ரோஸ்கிலியா தோட்டத்திற்கு செல்லும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தினை கொண்ட இந்த வீதியே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகிறது.
இந்த பகுதியில் இந்த வீதியினை மாத்திரம் சுமார் 300கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழுகின்றனர்
இந்த வீதியினூடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகன சாரதிகள் என பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த தோட்ட பகுதியில் உள்ள மக்கள் அவசர தேவைகளுக்கு நாளாந்தம் ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரபகுதியினை நாடவேண்டியுள்ளது.
வைத்திய சேவையினை இவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலையகாணப்பட்டாலும் இவர்களுக்கான வீதி மோசமான நிலையில் சேதம் அடைந்து காணப்படுகிறது.

குறித்த வீதியின் அருகாமையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படுகின்ற வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான விதி கட்டமைப்பு முறையாக காணப்பட வேண்டும் என மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

என்ஃபீல்ட் ரோஸ்க்லியா தோட்ட பகுதியில் இருந்து ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வீதியின் ஊடாக நடந்து செல்கின்றனர் இந்த வீதியினை புனரமைத்து மாணவர்களின் நலன் கருதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு சிறிய ரக பேருந்து சேவையினை வழங்க வேண்டும் எனவும் அம்மக்கள் தெரிவிப்பதோடு, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் வீதி புனரமைப்பு பணிக்காக மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் எங்களது தோட்ட வீதியினையும் புனரமைத்து தருமாறு நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு என்ஃபீல்ட் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்





