தற்போதைய பாகிஸ்தான் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) புதன்கிழமை (12) உறுதிப்படுத்தியது.
இந்த முடிவு இஸ்லாமாபாத்தில் நிம்மதியையும் பாராட்டையும் பெற்றது.
அங்கு அதிகாரிகள் இதை பாகிஸ்தானின் பாதுகாப்பு முயற்சிகளில் ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாகப் பாராட்டினர்.
மேற்கண்ட தீர்மானம் குறித்து ஜியோ செய்திச் சேவையிடம் உறுதிபடுத்திய SLC இன் முகாமையாளர்,
எந்த வீரரும் வீடு திரும்பவில்லை, அனைத்து இலங்கை வீரர்களும் பாகிஸ்தானிலேயே இருப்பார்கள்.
எந்தவொரு வீரரும் இலங்கைக்குத் திரும்ப விரும்பினால், தடையின்றி தொடரைத் தொடர்வதை மாற்று வீரர்கள் அழைக்கப்படுவார்கள்.
ஆனால் வீரர்கள் தமது நடவடிக்கைகள் குறித்து கிரிக்கெட் வாரியத்தால் முறையான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் – என்றார்.
இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்து 27 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து தொடரை இரத்து செய்யுமாறு அழைப்புகள் விடுக்கப்பட்ட நிலையில் SLC இன் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தாக்குதலை அடுத்து, தேசிய அணியின் சில உறுப்பினர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற கோரியுள்ளதாக அணி நிர்வாகம் முன்னதாக வாரியத்திற்கு தெரிவித்ததாக SLC தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் அனைத்து பாதுகாப்பு கவலைகளும் தீர்க்கப்படுகின்றன என்று உறுதியளித்து.
வீரர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக SLC தெரிவித்துள்ளது.
அனைத்து வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் அணி நிர்வாகமும் பாகிஸ்தானில் தங்கி திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தைத் தொடரும் என்றும் கூறியுள்ளது.
இருப்பினும், எந்தவொரு வீரரோ அல்லது அணி உறுப்பினரோ இன்னும் நாடு திரும்ப விரும்பினால், தொடர் இடையூறு இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாற்று வீரர்கள் உடனடியாக அனுப்பப்படுவார்கள் என்று SLC தெளிவுபடுத்தியது.
இந்த உத்தரவை மீறும் எந்தவொரு வீரரோ அல்லது ஊழியரோ சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் முறையான மதிப்பாய்வை எதிர்கொள்வார்கள்.
அதன்படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் SLC எச்சரித்தது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்த தயக்கங்களைத் தொடர்ந்து, தாக்குதலுக்குப் பின்னர் வருகை தரும் அணியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த கவலைகளைத் தீர்க்க, உள்துறை அமைச்சரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வி, இலங்கை அணியைச் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்குகிறார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
செவ்வாய்க்கிழமை ராவல்பிண்டியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் இலங்கையை ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலையும் மீறி இந்தப் போட்டி நடந்தது.
இதற்கிடையில், இரு அணிகளுக்கும் இடையிலான மீதமுள்ள சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார்.
மீதமுள்ள ஒருநாள் போட்டிகள் நவம்பர் 14 மற்றும் 16 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறும் என்று கூறினார்.
மீதமுள்ள போட்டிகள் முதலில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 15 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





