இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட சீன பாலியல் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை!

நம்பமுடியாத பல்வேறு ஆபத்தான பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் சீன பிரஜையான 33 வயதுடைய (Chao Xu ) சாவோ ஸு என்பவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விநியோகம் போன்ற 24 குற்றச்சாட்டுகளை இவர் ஒப்புக்கொண்டுள்ளார் .

மேலும், இவற்றினால் நூற்றுகனக்கவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளதுடன் அவர்கள் முறைப்பாடளிக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் வசித்து வருவதுடன் அவர்
சட்டப் பட்டதாரி மாணவராகவும் இருந்துவந்துள்ளார்.

பாலியல் வன்புணர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து கொடுத்தல், மற்றும் ஒளிமறைவு கேமராக்கள் மூலம் படம்பிடித்தல் உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *