மட்டக்களப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழைகாரணமாக வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
இதேவேளை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று இரவு லொறி ஒன்று வீடொன்றின் மதில்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியூடாக குருணாகலில் இருந்து அம்பாறை மருதமுனைக்கு சென்றுகொண்டிருந்த போது குறித்த லொறி வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்து காரணமாக வீட்டு மதில்சுவர் மற்றும் வீட்டிற்குள் இருந்த உடமைகளுக்கு சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பாக களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






