மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு – பல கோடி செலவில் கழுவாஞ்சிக்குடியில் திறப்பு
-வ.சக்திவேல்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக பல கோடி ரூபாய் செலவில் கொவிட் நோயாளிகளுக்கான நவீன அதி தீவிர சிகிச்சைப் பிரிவொன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன் தெரிவித்தார்.

இச்சிகிச்சைப் பிரிவு ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க அனத்தும் நடவடிக்கைகளும்இ வைத்திய அத்தியட்சகர் தலமையில் நடைபெற்றன. இதன்போது பொது வைத்திய நிபுணர்கள், மயக்க மருந்து வைத்திய நிபுணர்கள்இ வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், என பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர்.

மேற்படி தீவிர சிகிச்சை பிரிவு கொரனா நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து அதி தீவிர சிகிச்சையளிக்கும் பிரிவாக இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே தடவையில் 6 நோயாளிகளை வைத்து சிகிச்சையளிக்கக் கூடியவிதத்தில் இச்சிகிச்சை பிரிவு அமையப்பெற்றுள்ளதுடன் நோயாளிக்கு அண்மையில் இருந்து சிகிச்சை வழங்குவதற்கான வைத்திய துறையில் அதிநவீன முறைகளில் ஒன்றான வைரஸ் கிருமிகளுக்கு எதிர்மறை அழுத்தம் கொடுக்கக் கூடிய (negative pressure room) இந்த சிகிச்சை கூடம் அமையப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். குறித்த சிகிச்சை பிரிவை அமைப்பதற்கு பல கோடி ரூபாய்க்கள் செலவு செய்யப்பட்டுள்ளதுடன். இவ்வாறான சிகிச்சை கூடங்கள் இலங்கையில் ஒரு சில மாவட்டங்களிலையே அமையப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட சிகிச்சை பிரிவானது முதலாம் திகதி முதல் செயற்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *