மட்டு பெரிய…

மட்டு பெரிய உப்போடை வாவி கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திர படகு ஒன்று தீயில் எரிந்து சாம்பல் 
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள  பெரிய உப்போடை வாவிகரை வீதியில்  வாவி கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து இயந்திர படு ஒன்றை இனம் தெரியாவர்களால் தீவைத்ததில் 6 இலச்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி இயந்திர படகு ஒன்றுடன் வலைகள்,  முற்றாக எரிந்து சாம்பலாகிய சம்பவம் இன்று சனிக்கிழமை (4) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனா.;.

குறித்த வாவிக்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை வழமைபோல கடலில் மீன்பிடிக்க சென்று காலையில் திரும்பி வந்து இயந்திர படகை கரையில் இயந்திரம் மற்றும் வலைகளுடன் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று பின்னர் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு செல்வதற்காக வந்தபோது படகு தீயில் எரிந்து சாம்பலாகிய நிலையில் இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *