இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கிடைத்த 150 தொன் ஒட்சிசன்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், நோயாளிகளுக்கான ஒட்சிசன் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் விஷாகபட்டினம் மற்றும் சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 150 தொன் ஒட்சிசன் வாயு அடங்கிய கொள்கலன்கள் கொழும்பை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 451,401 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *