நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில் 4 இலட்சத்து 37ஆயிரத்து 507 குடும்பங்களைச் சேர்ந்த 15 லட்சத்து 58 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 465 பேர் உயிரிழந்துள்ளதுடன், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நாடுமுழுவதும் 783 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர். 31,417 பேரின் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அத்துடன் 61,875 குடும்பங்களை சேரந்த 232,752 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.





