இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு அனர்த்த நிலைமையினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் அனைத்து விடைத்தாள்களும் தற்போது உரிய பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் பரீட்சை நிறைவடைந்த பின்னர், அனைத்து விடைத்தாள்களும் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இது பல ஆண்டுகளாக சரியாக நடந்துவரும் ஒரு நடைமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காலநிலை நிலைமைகள் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி, மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.





