புத்தளம் மாவட்டம் உடப்பு கிராமத்தில் கடந்த சில நாட்களாக வீசிய கடுமையான சூறாவளி காரணமாக கடலுக்கு செல்ல முடியாமல் இருந்த மீனவர்கள், காற்று குறைவடைந்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (30) மீண்டும் கடலுக்கு சென்றுள்ளனர்.
கடலுக்கு சென்ற அவர்கள் வலையில் பெரும் தொகையான பார்மீன்கள் (விளமீன்கள்) வலையில் பிடிபட்டுள்ளன.
மீனவர்களுக்கு பாரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பெருமளவில் கிடைத்த பார்மீன், சந்தையில் ஒரு கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக வருமானமின்றி இருந்த மீனவர்களுக்கு இவ்வளவு பெரிய அளவில் மீன் கிடைத்தது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.



