இரத்தான ஆயிரக்கணக்கான பேருந்துகள்; முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று வசதி

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாகவும், வீதித் தடைகள் காரணமாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்தப் பேருந்துகளில் பயணிப்பதற்காக 15,000 பயணிகள் முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்துள்ளதாக, சபையின் ஆசன முன்பதிவு சேவையை மேற்கொள்ளும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

அவர்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்காக, தமக்கு விரும்பிய வேறொரு தினத்தில் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாக ஆசன முன்பதிவு சேவையை நடத்தும் ‘ஹான்ஸ் குளோபல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரி விமல் சிறிவர்தன தெரிவித்தார். 

இதற்காக 1315 அல்லது 070 3110 506 என்ற இலக்கங்களைத் தொடர்புகொண்டு வேறொரு வசதியான தினத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும், இதற்காக எவ்வித மேலதிகக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். 

தற்போது நுவரெலியா, நாவலப்பிட்டி, 87 ஆம் இலக்க யாழ்ப்பாண வீதி, வலப்பனை, மூதூர், பிபில ஆகிய இடங்களுக்கான பேருந்து சேவைகள் இயங்கவில்லை என்றும், ஏனைய இடங்களுக்கான பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *