நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிர்நீர்த்தர்களுக்காக முன்னெடுக்கப்படும் சர்வமத வழிபாடுகள்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் அனர்த்தங்களில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டவர்கள் அதிலிருந்து மீளவும் நாட்டின் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் செயற்பாட்டுக்கு ஆசிவேண்டியும் முன்னெடுக்கப்பட்டுவரும் சர்வமத வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சுகுமாரக்குருக்களின் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வழிபாடுகளில் விவசாயம்,காணி, நீர்ப்பாசண மற்றும் கால்நடை அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திலகநாதன்  சுற்றுலாத்துறை அமைச்சின் மட்டக்களப்புஇணைப்பாளர் வாணி செல்லப்பெருமாள்,கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலிவேண்டி பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அனர்த்தங்களில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டவர்கள் அதிலிருந்து மீளவும் ஜனாதிபதிக்கு ஆசிவேண்டியும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *