அண்மைய நாட்களாக வடமாகாணம் மன்னார்,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு ,கடற்பரப்புகளில் இந்தியாவின் பாண்டிசேரி (காரைக்கால்) பகுதிகளில் இருந்துவரும் இழுவைமடி படகுகளினால் வடமாகாண மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் செயற்பாடு வடக்கு கடற்பரப்பில் அதிகரித்து வருகின்றது
இந்தியன் இழுவைமடி படகுகளின் வரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை
இந்திய இழுவைமடி படகால் ஏற்பட்ட பிரச்சனைகள் சம்மந்தமாக இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியிடம் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தினால் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு மகஜர் இன்று மாலை 3.30மணிக்கு இந்திய தூதரகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.




