பிரபல கிரிக்கெட் பிரபலம் திடீர் ஒய்வு அறிவிப்பு..!!

வருகின்ற 4ம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ள ஆஷஸ் தொடரின் 5-வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி போட்டி என அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார்.

39 வயதான உஸ்மான் கவாஜா பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் அவுஸ்ரேலியாவில் குடிபெயர்ந்தது. அப்போது அவருக்கு 4 வயது. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட கவாஜா அவுஸ்ரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தனது அபார திறமையினை வெளிப்படுத்தி தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

டொப் ஆர்டரில் ஆடும் இடது கை துடுப்பாடட வீரரான அவர் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரராக வலம் வந்தார்.

கடந்த 2010-11 ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் கவாஜா அறிமுக வீரராக களம் கண்டார். அந்தப் போட்டி சிட்னியில் மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6206 ஓட்டங்களை பெற்றுள்ளார்.. இதில் 16 சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள் அடங்கும். 2021-23ல் ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டம் வென்ற அவுஸ்ரேலிய அணியில் கவாஜா அங்கம் வகித்தார்.

அந்த தொடரில்; அவர் 1621 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 2023ம் ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதையும் அவர் வென்றுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கவாஜா “அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். எதிர்வரும் சிட்னி டெஸ்ட் போட்டிதான் நான் விளையாடும் கடைசிப் போட்டி” என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *