பொகவந்தலாவ நகரில் காணப்படும் குப்பைகளை சேகரிக்க நோர்வூட் பிரதேசசபை அதிக வரி அறவிடுதாக கோரி பொகவந்தலாவ வர்த்தகர்கள் இன்று காலை 10மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் .
பொகவந்தலாவ வர்த்தக நிலையங்களில் உள்ள அனைத்து வர்த்த நிலையங்களையும் மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200பேர்கலந்து கொண்டதோடு சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது..
இதேவேளை, பொகவந்தலாவ பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது பிரதான நகரம் ஊடாக செல்வகந்த சந்திவரை சென்று மீண்டும் பேரணியாக பொகவந்தலாவ தண்டாயுதபாணி ஆலயம் முன்பாக வந்தடைந்நது.
பொகவந்தலாவ நகரப்பகுதியில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளை நோர்வூட் பிரதேசசபை சேகரிப்பதற்கு அதிகூடியவரியினை கோருவதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
இதன்போது, நகரப்பகுதியில் உள்ள சேகரிக்கப்படும் குப்பைகள், கால்வாய் , நீர் ஆகிய அனைத்திற்கும் நோர்வூட் பிரதேசசபைக்கு நாங்கள் வருடா வருடம் வரிப்பணம் செலுத்தி வருகின்றோம்..
நாங்கள் அருந்தும் குடி நீர் கூட சுத்தமற்ற நீரினை பருகுகின்றோம் இப்படியான நீரினை பருகுவதால் என்ன நோய்கள் இருக்குமென எமக்கு சந்தேகம் காணப்படுகிறது .
ஆனால் தற்பொழுது பொகவந்தலாவ நகரில் குவியும் குப்பைகளை சேகரிக்க நளாந்தம் 200ரூபாயினை மேலும் செலுத்துமாறு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கோருவதாக கூறுகிறார். ஆனால் தாம் ஒருபோதும் குப்பைக்கான வரிப்பணத்தை செலுத்த போவதில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்..
இதேவேளை எமதுபிரச்சினைகள் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவிக்கின்றனர்.
குப்பை வரி எடுக்காதே, குப்பைக்கான வரியை கட்டமாட்டோம், நாங்கள் செலுத்தும் வரிக்கு என்ன பயன், மேலும் ஒரு வரிசுமையா குப்பைக்கு போன்ற பாதைகளையும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.






