ஜிகா வைரஸ் தொற்று: கேரளாவில் சிறார் உள்பட மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்ட அனைவருமே திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்களாக இருந்த நிலையில், எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் திருவனந்தபுரத்தில் சுகாதார ஊழியராக பணிபுரிந்து வந்ததாகவும் வீணா ஜார்ஜ் குறிப்பிட்டார்.
35 பேரில் 11 பேர் மட்டும் தற்போது சிகிச்சையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.