18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியா?

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதல் வலுப்பெற்றுள்ளமை மற்றும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையின் படி இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், 12 – 18 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசி போட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதற்கான சிறந்த தீர்வாக தடுப்பூசி உள்ளது.

எனவே, கொரோனா தடுப்பூசி 20-30 வயதினருக்கு வழங்குவதை விட 12 – 18 வயதுடையோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த சங்கம் வழியுறுத்தியுள்ளது.

அத்துடன், உலக சுகாதார அமைப்பினால் 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போடுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஃபைசர் தடுப்பூசி மட்டுமே.

ஆகவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியை கொடுக்கலாம்.

இதேவேளை, நாட்டிலுள்ள 20 – 30 வயதினருக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதை விட, 12 – 18 வயதினருக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கொரோனா காரணமாக இறப்பவர்களில் 80.7 சதவிகிதத்தினர் தடுப்பூசி போடாதவர்கள். எனவே 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *