கனமழையால் நிலச்சரிவு; சுவர் இடிந்து 11 பேர் உயிரிழப்பு
மும்பையில் பெய்த கனமழை காரணமாக செம்பூரில் உள்ள பாரத் நகர் குடியிருப்புப் பகுதியின் சுவர்கள் நிலச்சரிவால் இடிந்துவிழுந்ததில் வீடுகளின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 11 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
மேலும் 8 பேர் இடிபாடுகளின் உள்ளே சிக்கியிருப்பதாக கூறப்படுவதால் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.