கல்முனை கடற்கரையில் மீனவர் ஒருவருக்கு 12 அடி நீளம் உடைய கொப்புற மீன் இன்று (04.09.2021) பிடிபட்டது.
இதன் எடை சுமார் 300 கிலோ கிராம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும் மீன்பிடி தொழிலாளர்கள் தமது மீன்பிடி தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மீனவர்கள் தமது மீன்பிடி தொழிலை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். கல்முனை கடற்கரைப் பகுதியில் மீனவர் ஒருவருக்கு பிடிபட்ட இந்த மீனின் பெறுமதி சுமார் மூன்று லட்சம் ரூபா என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த மீன் வியாபாரிக்கு சுமார் 50 கிலோ கிராம் எடையுள்ள திருக்கை இன மீன் ஒன்றும் இன்று பிடிபட்டது.
தற்போது கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், பிடித்த மீன்களை சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





