18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி – பிரித்தானியா

பிரித்தானியாவில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

நாளை திங்கட்கிழமை இங்கிலாந்தில் சில கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இங்கிலாந்தில் 18 வயது பூர்த்தி செய்த 87.8 விகிதமானோருக்கு  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 18 வயது நிரம்பிய மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு திங்கட்கிழமைக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை வழங்குவதற்கான இலக்கையும் அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளது.

வேகமாக பரவக்கூடிய டெல்டா மாறுபாட்டால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முகமாக கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முடிவு செய்துள்ளார்.

Leave a Reply