இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 250 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளான கர்ப்பிணிகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என, குடும்ப நல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ராமாலி த சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, தொற்றுக்கான அறிகுறி காணப்படுமாயின், உடனடியாக கர்ப்பிணிகள் சிகிச்சை நிலையங்களுக்கு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்