கடவுள்கூட காப்பாற்ற முடியாத காலம்: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு

பல்வேறு திரிபுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல்கள், நாளுக்கு நாள் இந்த உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இதற்கான பொறுப்புக்கூறலுக்கு ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்காமல், அனைவரும் சுய பொறுப்புடன் நடந்து கொண்டோமேயானால், தொற்றுப் பரவலில் இருந்து பாதுகாப்புப் பெறமுடியும் என்று, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கரடியனாறு வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான ஒரு பகுதி மருத்துவப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாட்டுக்குள் தற்போது, “டெல்டா” வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார தரப்பினர் பாரிய அர்ப்பணிப்புக்கு மத்தியில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், covid-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு கோரிக்கைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாகத் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் தொற்று அபாயத்தைக் குறைத்து கொள்ள முடியும் என்பதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் பெற்றுக்கொள்ள முடியும். முகக்கவசங்களை அணிந்துகொள்ளல், சமூக இடைவெளியைப் பேணல், பொது இடங்களில் கூடவேண்டாம், அநாவசியப் பயணங்களைத் தவிர்த்தல் போன்ற வழிகாட்டல்களை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்வாறான விடயங்களைக் கடைபிடிப்பதால், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

இவற்றைக் கடைபிடித்தல் என்பது, ஒவ்வொருவரினமும் சுய பொறுப்பாகும். எம்முடைய கவனக்குறைவு காரணமாகத்தான் அதிவேகமாக தொற்றுப் பரவல் ஏற்படுகின்றது.

நாம் கவனக்குறைவாக நடந்துகொண்டு, இன்னொருவரைக் குறைகூறுவது தவறாகும் கடவுள் கூட காப்பாற்ற முடியாத இந்த சந்தர்ப்பத்தில் நீங்களே முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு covid-19 தொற்றில் இருந்து நீங்களே உங்களை காப்பாற்றிக் கொள்ளும் காலம் இது.

“அரசாங்கத்தை எதிர்க்கட்சியினர் குறைகூறுவது எந்தவித அர்த்தமும் இல்லை. இலங்கை மக்களின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பும் கடமையும், இலங்கைப் பிரஜை என்ற வகையில் நம் ஒவ்வொவருக்கும் உள்ளது . இந்த covid-19 தொடரை முழுமையாக இல்லாதொழிக்க அரசாங்கம் தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்து உள்ளது

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இலங்கைக்குப் போதுமானளவு தடுப்பூசிகளைக் கொண்டுவந்துள்ளது. இன்னும் கொண்டுவந்துகொண்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றொழிப்புக்குத் தேவையான மிக முக்கிய நடவடிக்கை இதுவேயாகும். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கான முழுப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் covid-19 சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் கூடிய விரைவில் covid-19 தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது எமது ஒரே இலக்கு.

தற்போது முடக்க நிலை காரணமாக நாடு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது நமது நாட்டின் சுற்றுலாத்துறையை பொறுத்தமட்டில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தமது தொழிலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எமது அரசாங்கத்தினால் மக்களுக்கு தேவையான அனைத்து அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் தீவிரமாக covid-19 தொற்று காலப்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *