யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் 103 கிலோகிராம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட குறித்த தொகை கஞ்சாவின் பெறுமதி 37 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களில் வசிக்கும் 20 தொடக்கம் 40 வயதுடையவர்கள் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை கொரோனா பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்றதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.