மாத்தறை, வெலிகம கொட்டவில பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட அமில பிரசன்ன எனும் சன்சைன் சுத்தாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அவர் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
மேலும் 31 வயதான அவர் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த குறித்த நபரின் சடலத்தை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோான வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





