மாடுகளை வெட்டுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் S.D.A.B பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான நான்கு சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.