2021 கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த விருதை வென்றது டைட்டான்

2021 கான்ஸ் திரைப்பட விழாவில் டைட்டான் எனும் பிரஞ்சுத் திரைப்படம் சிறந்த விருதை வென்றுள்ளது.

திட்டமிட்டதைவிட முன்கூட்டியே வெளியிடப்பட்ட விவரங்களின் படி தொடர் கொலை பற்றிய மிகவும் கற்பனை வாய்ந்த டைட்டான் திரைப்படம் முதல் பரிசைப் பெற்றது உறுதியாகியுள்ளது.

அந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜூலிய டோகோர்னோ விருதைப் பெறும் இரண்டாவது பெண் இயக்குநர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இரத்து செய்யப்பட்ட கான் திரைப்பட விழா பல பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுக்கு இடையே மீண்டும் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட அனைவரும் 48 மணிநேரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை கேளிக்கை நிகழ்ச்சிகளும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply