இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ச அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்திற்கு ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளார் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு ஐக்கிய நாடுகளின் சபையின் அமர்வுகளில் கலந்துக்கொள்வதற்காக, ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார்.
மேலும் நியுயோர்க் நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளன.
ஜனாதிபதியுடன், மேலும் சிலர் இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





